actress ramya nambesan , bhavana dancing in actress marriage video : தமிழில் நாகராஜ சோழன் எம்எல்ஏ, மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மிருதுளா முரளி. இதற்கு பின்னர் மலையாளத்தில் ரெட் சில்லி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
இப்படிப் பல திரைப்படங்களில் நடித்த இவர் உதவி இயக்குனரான நிதின் விஜய் என்பவரை சில காலங்களாக காதலித்துக் கொண்டிருந்தார்.
இவர்களில் இரண்டு குடும்பமும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் ஏப்ரல் மாதமே நடக்க இருந்தது ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப்போனது.
அதனைத் தொடர்ந்து கடந்த 29-ஆம் தேதி முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையில் திருமணம் நடந்துமுடிந்தது. இந்த திருமணத்திற்க்கு நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகுல் சுப்பிரமணியம் போன்ற பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்தில் நடிகை பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன், மணப்பெண் மற்றும் மணமகன் என அனைவரும் நடனம் ஆடினார். அந்த டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.