ஏன்டா இந்த படத்துல நடிச்சோம்னு வேதனைப்பட்டேன் – ரம்யா கிருஷ்ணன் பேச்சு

Ramya pandian

Ramya krishnan : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் 14 வயது இருக்கும் போதே திரை உலகில் நடிக்க வந்துவிட்டார். ஆரம்பத்திலேயே ஹீரோயின், குணச்சித்திர கதாபாத்திரங்களில் மாறி மாறி நடித்தார் அவ்வபோது வெற்றி கொடுத்து கொண்டிருந்த இவர் டாப் ஹீரோ படங்களில் நடித்து  பிரபலம் அடைந்தார்.

மேலும் அதை சரியாக பயன்படுத்தி வளர்ந்தார். தற்பொழுது டாப் ஹீரோக்களில் படங்களில் அம்மா, சித்தி மற்றும் குணசித்திர போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்துள்ளார்.

படம் கடந்த 10 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது. இந்த படத்தில் அவருக்கு பெரிய அளவு கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தியுள்ளார். இந்த நிலையில் படத்தின் பிரமோஷன்னுக்காக ரம்யா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்று கொடுத்தார்.

அப்போது ஒரு சில படங்கள் நடிக்கவே தயங்கினேன் ஆனால் அந்த படங்கள் பெரிய ஹிட் அடித்தது என கூறினார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. படையப்பா படத்தில் ஏண்டா நெகட்டிவ் ரோலில் நடித்தோம் என வேதனைப்பட்டேன் ஆனால் அந்த படம் வெளியாகி 24 ஆண்டுகள் கழித்தும் அந்த கதாபாத்திரம் பேசப்படுகிறது.

இதுபோல பாகுபலி படத்தில் நடிக்க நிறைய கண்டிஷன் போட்டேன் படம் வெளிவந்து வேற லெவல் ஹிட் அடித்தது. இந்த படங்களில் நடிக்க நான் கொஞ்சநஞ்ச பேச்சா பேசினேன் என கூறி சிரித்தார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.