தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டுமே நாற்பதைக் கடந்தும் இன்னும் இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்கள். அந்த வகையில் அப்பொழுது உள்ள நடிகர்கள் முதல் இப்பொழுது உள்ள நடிகர்கள் வரை இணைந்து நடித்துள்ள ஒரே நடிகை என்றால் அது ரம்யா கிருஷ்ணன் தான்.
1910ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய 14 வயதில் பலே மித்திருளு என்ற தெலுங்கு திரைப்படத்தில் முதன்முறையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய ரம்யாகிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி படிக்காதவன் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு நடனமாடி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.
இதுவரை ரம்யா கிருஷ்ணன் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு பெரிய ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு மற்றும் சரியாக அமையவில்லை. அதன்பிறகு ஆயிரத்து 99 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய படையப்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரின் மார்க்கெட் எகிறியது.
தன்னுடைய 33 வயதில் திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன் அதன்பிறகு பாகுபலி என்ற திரைப்படத்தில் சினிமாவில் மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடர்ந்தார். மேலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் ஒருநாள் தொகுப்பாளராகவும் கலந்து கொண்டுள்ளார் என ரம்யா கிருஷ்ணன் நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார்.