Thalapathy 68: விஜய்யின் தளபதி 68வது படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தில் படையப்பா பிரபலம் ஒருவர் இணைந்து நடித்திருப்பதாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் தளபதி 68 படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்படி சமீபத்தில் தான் தளபதி 68 ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்க உள்ளது. கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகைகள் முடிந்தவுடன் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
அப்பா, மகன் என விஜய் இரட்டை கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இவரை தொடர்ந்து மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, கிச்சா, சுதீப், மீனாட்சி சவுத்ரி, இவானா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் தற்போது தளபதி 68 படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளாராம்.
ரம்யா கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி 68 படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி விஜய், வெங்கட் பிரபு இருவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். எனவே இதன் மூலம் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் தளபதி 68 படத்திற்காக காத்து வருகின்றனர்.
படையப்பா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த ரம்யா பாண்டியன் அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அப்படி கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார் இதனை அடுத்து தற்பொழுது விஜய் உடன் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.