ரம்யா கிருஷ்ணன் வீட்டில் விசேஷம்.! இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகு.! வைரலாகும் புகைப்படங்கள்

ramya-kirshanan
ramya-kirshanan

actress ramya krishnan 50th birthday celebration photo: தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் இவர் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்தவர், தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் தங்களுடைய 14 வயதிலேயே வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஒய்ஜி மகேந்திரன் ஜோடியாக நடித்திருந்தார், ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன்பே புலரும் போல் என்ற திரைப்படத்தில் மம்முட்டி மோகன்லால் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார்.

மேலும் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடத்தில் நடித்து அசத்தினார், 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படத்தில் தனது முழு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்திருந்தார்.

இன்றுவரை நீலாம்பரி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டது அந்த அளவு கதாபாத்திரம் அழுத்தமான கதாபாத்திரம் அமைந்தது, படையப்பா திரைப்படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்தது, அதன்பிறகு கமலஹாசனுடன் பஞ்சதந்திரம் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து இருந்தார்.

மேலும் ரம்யா கிருஷ்ணன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பின்பு பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா வாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார், மேடம் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கௌதம்மேனன் இயக்கிய குயின் என்ற தொடரிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், பல நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். ரம்யா கிருஷ்ணன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வருகிறார்.

2003ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் 50 வயதைக் கடந்த ரம்யா கிருஷ்ணன் அதை மறைக்காமல் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு தன்னுடைய குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகு என வர்ணித்து வருகிறார்கள்.

View this post on Instagram

#ramyakrishnan ❤ @meramyakrishnan

A post shared by Ramya Krishnan (@queenramyakrishnan) on