நடிகை ரம்பா 90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்த நடிகைகளில் ஒருவர் இவர் முதலில் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் உழவன் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு ஹீரோயின்னாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்தார் .
அந்த படத்தில் தனது அழகையும், திறமையும் காட்டி வெற்றி கண்டார். படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. பிறகு நடிகை ரம்பா தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர் உடன் கைகோர்த்து தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் இப்படி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உருவாகினர்.
குறிப்பாக இவர் நடிக்கும் படங்களில் பெரிதும் தொடையழகை காட்டி நடித்ததால் ரசிகர்கள் இவரை செல்லமாக தொடையழகி ரம்பா என அழைத்தனர். இப்படி சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ரம்பா 2010 ஆம் ஆண்டு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.. மேலும் அதே ஆண்டில் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்
இப்பொழுது இந்த ஜோடி வெளிநாட்டிலேயே செட்டில்லாகி உள்ளது மேலும் தனது குழந்தைகளையும் அங்கேயே படிக்க வைத்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது நடிகை ரம்பா தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்பொழுது எதிர்பாராத விதமாக அவர் கார் விபத்துக்கு உள்ளானது அப்பொழுது ரம்பா மற்றும் இரண்டு பிள்ளைகளும்..
அந்த விபத்தில் சிக்கினார் இதில் ரம்பா மற்றும் மூத்த மகளுக்கு சிறு காயங்களுடன் தப்பினர் ஆனால் இளைய மகளுக்கு சற்று வலுவான அடிபட்டுள்ளது அதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ரம்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் எங்களுக்கு இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது நாங்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
Actress #Ramba and her kids suffer minor injuries in a car accident#Kollywood pic.twitter.com/kGMRGPkK2q
— Chennai Times (@ChennaiTimesTOI) November 1, 2022