Rakul Preet Singh Net worth: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு மிகவும் குறைவான சம்பளம் தான் வழங்கப்பட்டு வருகிறது அப்படி இருந்தாலும் ஏராளமான நடிகைகள் ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பரங்கள், சோசியல் மீடியாக்கள் இதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டி வருபவர்களும் இருக்கின்றனர்.
அப்படி ரகுல் பிரீத் சிங் இன்று தனது 33 வயது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவர் சேர்த்து வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியை சேர்ந்த ராகுல் ப்ரீத் சிங் மாடலிங்கில் அதிக ஆர்வம் இருந்ததால் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்படி ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் தற்பொழுது பாலிவுட் பட வாய்ப்புகள் தான் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங்குக்கு கிடைத்து. ரகுல் ப்ரீத் சிங் தமிழில் யுவன், தடையறத் தாக்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் கோலிவுட் பிரபலமானவர். மேலும் என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி பட வாய்ப்புகள் குவிந்தது.
அப்படி தற்பொழுது முன்னணி நடிகையாக கலக்கி வரும் ரகுல் பிரீத் சிங் தனது 33 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவர் சிவகார்த்திகேயனின் அயலான்,ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்த படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. ஒரு படத்தில் நடிப்பதற்காக சுமார் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வரும் ராகுல் ப்ரீத் சிங் ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் தனியாக சொந்த வீடுகளை வைத்துள்ளாராம்.
மேலும் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றையும் சமீபத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009இல் நடிக்க தொடங்கிய இவர் சுமார் மொத்தம் 50 கோடி சொத்துக்கு அதிபராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரகுல் பிரீத் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்திருக்கும் அயலான் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளத. அதேபோல் இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.