தமிழ்சினிமாவில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இவர் தெலுங்கு சினிமாவில் மட்டுமே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நமது நடிகையின் கைவசம் தற்போது இந்தியன்2 அயலான் போன்ற திரைப்படங்கள் இருந்தாலும் தற்சமயம் காண்டம் சம்பந்தமான ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தார். பொதுவாக இது போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கு பல நடிகைகளும் மறுப்பு தெரிவித்த நிலையில் ரகுல் பிரீத் சிங்க் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் ஒரு பிரபல காண்டம் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய ப்ராடக்ட்களை தயாரித்து இளம் பெண்களிடம் அதனை கொடுத்து பரிசோதனை செய்வது போல இந்த கதை அமைக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் பரிசோதனையாளராக நடிகை ராகுல் பிரீத் சிங் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது நமது நடிகை இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு திரைப்படத்தை வெளியிடுவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கண்டிப்பாக உருவாகும் ஆகையால் தயாரிப்பு நிறுவனங்களும் இத்திரைப்பட படப்பிடிப்பை கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.