actress rajalakshmi latest news: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக நடந்து வரும் ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர்கள் தான் ராஜலட்சுமி மற்றும் செந்தில். இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது ஊரறிந்த உண்மை.
இவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து கிராமத்து நாட்டுப்புற பாடல்களை மிக அற்புதமாக பாடி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள். இதை தொடர்ந்து செந்தில் கணேஷ் தன்னுடைய விடா முயற்சியின் காரணமாக இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தயாரானார்.
இதை தொடர்ந்து இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாபெரும் வெற்றி பெற்று ஒரு அற்புதமான வீட்டை பரிசாகப் பெற்றார் அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் காரணமாக அவருடைய வாழ்க்கையே செம ஹிட்டாக மாறிவிட்டது.
தற்போது இந்த ஜோடிகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் மேடை பாடல்கள் பாடி வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் பாடிய என்ன மச்சான் சொல்லு புள்ள என்ற பாடல் தான் அது மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இதை தொடர்ந்து கோவில் திருவிழா ஒன்றில் மேடைக் கச்சேரியில் மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற பாடலை பாடியிருந்தார் இப்பாடல் கலைவாணி என்பவர்தான் இயற்றினார் என்று ராய்லட்சுமி கூறியிருந்தார். ஆனால் இந்த பாடலை டாக்டர் கலைச்செல்வி தான் எழுதினாராம் இந்த பாடல் 2 கோடிக்கு மேல் பார்வையாளரின் பெற்றது.
இந்த பாடலை மதுரை மல்லி தான் பாடி உள்ளார் ஆனால் ராஜலட்சுமி வேறு ஒருவரின் பெயரை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் யூடியூப் சேனலில் இன்று வரை அந்தப் பாடல் இடம் பெற்றிருக்கிறது. ஆகையால் ராஜ லட்சுமி கோரிய கருத்தானது தவறு என வாபஸ் பெற வேண்டும் அப்படி இல்லையேல் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மதுரை மல்லி மிக வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து ராஜலஷ்மி நான் என்னுடைய தங்கை பாடிய பக்தி பாடல் என்றுதான் அறிமுகம் கொடுத்தேன் ஆனால் யாரோ ஒருவர் இதை எடிட் செய்து மாமானு கூப்பிட தான் மனசு சொல்லுது என்ற பாடலை புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் இதற்கு நான் பொறுப்பல்ல என்பதை கூறவே இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளேன் என கூறியுள்ளார்.