தனது கவர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் நடிகை ரைசா வில்சன். இவர் நடிகர் ஹரிஷ் கல்யானை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது ஆனால் அது துளி கூட உண்மையில்லை என்று ரைசா வில்சன் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரைசா வில்சன் ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறார்கள்.
ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் ரைசா வில்சன் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்து இளசுகளின் மனதில் எளிதில் இடம் பிடித்தார்.
இவர் முதல் முதலில் துணை நடிகையாகவும், மாடலிங்க்காகவும் தனது கெரியரை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவரின் விடாமுயற்சியினால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அந்தவகையில் இவர் மாலத்தீவு மற்றும் வெளிநாடுகள் போன்றவற்றிற்கு தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.
இந்நிலையில் ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பரின் மடியில் உட்கார்ந்து கொண்டு மிகவும் இறுக்கமாக கட்டிப்பிடிக்கும் புகைப்படத்தை ஹார்ட் சிம்பிள் போட்டு வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறதே இவர் வெளிநாட்டு நபர் ஒருவரை காதலித்து வருகிறார் என்று. இதோ அந்த புகைப்படம்.