அறியா வயதில் பள்ளி சீருடையில் நடிகை ரைசா வில்சன்..! இணையத்தில் வைரலாகும் குழந்தைப்பருவ புகைப்படம்..!

raiza-willson.jpg-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பு பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறும் பல்வேறு போட்டியாளர்களுக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது வழக்கம் தான் அந்த வகையில் தற்போது பல்வேறு போட்டியாளர்கள் இன்று சினிமாவில் கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு பூர்வீகமாக கொண்ட நடிகை ரைசா வில்சன் தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் இதன் மூலமாக மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு விளம்பர படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்ட ரைசா வில்சன் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் இவர் வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் கூட வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு தோழியாக நடித்து இருப்பார்.

இதுபோன்ற பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த நமது நடிகையை ரசிகர்கள் பெரும் அளவிற்கு கவனிக்கவில்லை இந்நிலையில் அவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவருடைய சிறுவயது புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது இதைப்பார்த்த ரசிகர்கள் நமது ரைசாவா இது என பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

raiza willson
raiza willson