பரபரப்பு செய்தி!! பிக்பாஸ் ரைசாவிற்கு ஏற்பட்ட சோகம்..!!மருத்துவர் மீது புகார்..சக நடிகைகள் அச்சம்..

raisa

தற்பொழுது உள்ள பல நடிகைகள் அழகாக வேண்டும் என்பதற்காக சிகிச்சை செய்து தங்களது அழகை மேம்படுத்தி வருகிறார்கள். பொதுவாக  நடிகை மிகவும் அழகாக இருந்தால் மட்டுமே நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வோம் இதன் மூலம் இவர்களுக்கு திரைப்படங்களில் பல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்நிலையில் நடிகை ரைசா மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக அணுகி அந்த மருத்துவர்  தவறாக சிகிச்சை செய்வதால் ரைசாவின் முகம் ஒரு பக்கம் வீங்கி உள்ளது.அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ரைசா. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளசுகள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் நடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் காதலிக்க நேரமில்லை, எப் ஐ ஆர் உட்பட  நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரைசா ஃபேசியல் செய்ய வேண்டும் என்பதற்காக டாக்டர் பைரவியை சந்தித்துள்ளார். ஆனால் டாக்டர் பைரவி மிகவும் வலுக்கட்டாயமாக வேறொரு சிகிச்சை செய்துள்ளார். அந்த சிகிச்சை ரைசாவை பாதித்து கண்னின் பக்கத்தில் பெரிதாக வீங்கி உள்ளது. எனவே ரைசா உடனே டாக்டர் பைரவியை  நேரில் சந்திக்க போயுள்ளார் .

ஆனால் டாக்டர் பைரவியின் உதவியாளர்கள் அவர் சென்னையில் இல்லை என்று கூறிவிட்டார்களாம். எனவே இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ரைசா.  அந்த வகையில் இந்த தகவல் சோஷியல் மீடியாக்கள்,தொலைக்காட்சிகள் என்று பலவற்றில் மிகவும் பரபரப்பாக வைரலாகி வருகிறது. இதோ ரைசாவின் புகைப்படம்.

raisawilson
raisawilson