காதல் தோல்விக்குப் பிறகு ரைசாவின் புதிய உறவை பற்றி கேட்ட ரசிகர்கள்.! அதற்கு ரைசா என்ன கூறியுள்ளார் பாருங்க.!

raisa willson 1
raisa willson 1

சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் பேசுபொருளாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரைசா வில்சன். இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினாலும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு இவர் பிரபலமடைந்து இருந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேம காதல் திரைப்படத்தின் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தார்.இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹரிஷ்கல்யாண் நடித்திருந்தார்.முழுவதும் காதல் காட்சிகள் மற்றும் ரொமான்டிக் நிறைந்த திரைப்படமாக அமைந்தது.

இவர் இவ்வாறு பிரபலமடைந்த இருந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் மாடலிங் பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு கன்னட சினிமாவில் சில விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான் ஓரளவிற்குப் பிரபலமடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் இவர் நடிப்பில் தற்பொழுது வரையிலும் பியார் பிரேமா காதல் திரைப்படத்தை தவிர இன்னும் பல படங்கள் வெளிவராமல் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அண்மையில் ரைசா தனது முகத்தை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சர்ஜரி செய்துகொள்ள போய் பல பிரச்சனைகளை சந்தித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது  தான் இவரின் முகம் சரியாகி மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்துரையாடுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் காதல் தோல்வி பற்றிய கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ரைசா ஐந்து வருடத்திற்கு முன்பு காதல் தோல்வி ஏற்பட்டது தற்பொழுது ஒரு நல்ல காதலுக்காக வெயிட் பண்ணி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

raisa 3
raisa 3