ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்து ரசிகர்களை கண்கலங்க வைத்த ரைசா.! வைரலாகும் பதிவு

raisa 2
raisa 2

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது போன்றவற்றை செய்து எப்படியாவது தங்களுக்கு என ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வருகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு நடிகையை டிவி பார்ப்பதை தவிர நேரில் பார்ப்பது அவரிடம் பேசுவது எல்லாம் குதிரை கொம்பு. ஆனால் தற்பொழுது அப்படி கிடையாது நாள்தோறும் ரசிகர்கள் எந்த  நடிகையிடம் கேள்விகளை கேட்க விரும்பினாலும் சோஷியல் மீடியாவின் மூலம் அவர்களிடம் கேட்டு வருகிறார்கள்.

இதுவும் ஒரு பக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் நடிகைகளை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் தன்னைப் பற்றி தப்பாக பேசிய ரசிகர்களிடம் மனமுருகி கவலைப்பட்டு உள்ளார் நடிகை ரைசா.

நடிகை ரைசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இதன்மூலம் இவருக்கு இதைத்தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேம காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளசுகள் மனதையும் சுண்டி இழுத்தார்.

இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து இவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இதுவரையிலும் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இவரின் முகத்தில் தவறான அறுவை சிகிச்சை ஏற்பட்டதாக கூறிய பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதனால் அவரின் முகத்திலும் காயம் ஏற்ப்பட்டது தற்பொழுது தான் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி உள்ளார். அந்த வகையில் தொடர்ந்து ரைசா மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கியுள்ளார்.

raisa wilson
raisa wilson

அந்த வகையில் சமீபத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் இதனை பலரும் ட்ரோல் செய்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் ரைசா நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தாள் எதிரானவர்கள் என்று பொருள். பொதுவாக நடிகைகள் பிகினி அணிவது சாதாரண ஒன்று. இதைவிடவும் நீங்கள் கவனம் செலுத்த நிறைய விஷயங்கள் உள்ளது. எனக்கு விருப்பமான ஆடையை உடுத்தூக்கிறேன்.  மற்றவர்கள் கருத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்று பதிலளித்துள்ளார்.