சரியான டுபாக்கூர் தான் ரைசா மூஞ்சி வாங்கியதற்கு காரணமே வேற உண்மையை போட்டு உடைத்த டாக்டர்.?

raisa wilson

தற்பொழுது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளவர் நடிகை ரைசா.  இவர் சமீபத்தில் தனது முகத்திற்காக பேசியல்  செய்ய மருத்துவரை அணுகியதாகவும் அவர் மாற்றி சிகிச்சை செய்து முகம் வீங்கி விட்டதாகவும் கூறி அந்தப் பெண் மருத்துவர் மீது புகார் அளித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அந்த மருத்துவரிடம் ஒரு கோடி நஷ்டை கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். சில வாரங்களாக இந்த தகவல் தான் இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் மாடலிங்காக தொடர்ந்து பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அதன் பிறகு இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இவர் இந்நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தார்.பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் தொடர்ந்து சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கு பிறகு முதலில் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா வில்சன் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் பியார் பிரேமா காதல். இந்த திரைப்படம் முழுவதுமாக ரொமான்ஸ் மற்றும் காதலை மையமாக வைத்து இயக்கப்பட்டு இருந்ததால் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் முகத்தின் அழகை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ஒருவரை அணுகி உள்ளார்.

அறுவை சிகிச்சை செய்த அடுத்த நாள் ரைசாவின் முகம் ஒரு பக்கம் வீங்கி காயம் போலிருந்தது. எனவே ரைசா பெண் மருத்துவரின் மீது புகார் அளித்து ஒரு கோடி நஷ்டை தர வேண்டும் என்று பெண் மருத்துவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்தநிலையில் பெண் மருத்துவர் நேரடியாக பிரஸ்மீட் வரவைத்து அறுவை சிகிச்சை செய்து முடித்ததும் மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற எதுவும் செய்யக்கூடாது என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் இதனை கேட்காமல் ரைசா சில மணி நேரங்களிலேயே மது அருந்தியதனால் தான் முகம் இப்படி வீங்கி உள்ளது.

இவ்வாறு அழகு பொங்கி விட்டால் திரைப்படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்காது என்று பயந்து பணத்திற்கு கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக ரைசா என்னிடம் ஒரு கோடி நஷ்டைடு கேட்டு மிரட்டுவதாக கூறியுள்ளார் டாக்டர்.

இந்த நிலையில் ரைசா ரசிகர்களிடம் இருந்த நல்ல பெயரையும் இப்படி டேமேஜ் செய்து கொண்டார். எனவே ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று அனைவரும் ரைசாவை கழுவி ஊற்றி வருகிறார்கள்.