Actress Raadhika: சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்கள், அரசியல் என அனைத்திலும் கலக்கி வருபவர் தான் பிரபல நடிகை ராதிகா சரத்குமார். சினிமா வட்டாரத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தை வைத்திருக்கும் ராதிகா கதாநாயகி மட்டுமல்லாமல் குணச்சித்திரம், அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது வரையிலும் நடித்துவரும் ராதிகா இன்று தனது 61 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ராதிகா அன்றிலிருந்து இன்று வரையிலும் பல வெற்றி திரைப்படங்களை தந்த வருகிறார்.
முதல் திரைப்படமே இவருக்கு வெற்றி பெற்றதால் ராசியான நடிகையாக மாறிய இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. அப்படி நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர் காவலன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வெற்றினை கண்டார். அந்த வகையில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக திரையுலகில் சாதனை படைத்துவரும் ராதிகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி, பாலிவுட் வரையிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இதனையடுத்து விஜய் அஜித், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து வரும் ராதிகா 61வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் நிலையில் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ராதிகாவிற்கு கார் என்றால் மிகவும் பிடிக்குமாம் அப்படி range rover, வெள்ளை நிற audi கார், Benz e class, Nissan sport car, சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை வைத்துள்ளாராம். இதனை அடுத்து ராதிகா ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 15 லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், கோடிக்கணக்கில் பேங்க் பேலன்ஸ் இருப்பதாகவும் அப்படி இவரின் சொத்து மதிப்பு மொத்தம் ரூபாய் 100 முதல் 120 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.