குக் வித் கோமாளி பாலாவுடன் நடனமாடிய நடிகை ப்ரியங்கா மோகன்.! எரிச்சலில் சக போட்டியாளர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றது அதில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி மக்களுக்கு மிகவும் பிடித்து வந்தது காரணம் அந்த ஷாேவை பார்த்தால் நேரம் போவதே தெரியாது என்று ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். ஃபுல் பன் என்ற நோக்கத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஷோவில் சமைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதிகம் காமெடியாக இருப்பதால் ரசிகர்களுக்கு பிடித்த ஷோவாக இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் குக்களை விட கோமாளிகள் தான் அதிகம் புகழ் பெற்று வருகிறார்கள்.அவர்கள செய்துவரும் அரட்டைக்கு அளவே கிடையாது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமாக கலக்கிக் கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளை அடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தா சீசன் தொடர்ந்து கொண்டே போகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் நம்ம வீட்டு பிள்ளை டான் படத்திற்கு புரமோட் செய்வதற்காக சிவகார்த்திகேயன் அவர்கள் சீஃப் கெஸ்ட் ஆக வருகிறார். “சும்மாவே ஃபன் தான் இதுல சிவகார்த்திகேயனா சொல்லவே வேண்டாம்” என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 2வில் வந்து எல்லாரையும் பாராட்டி போன சிவகார்த்திகேயன் சீசன் 3 விலும் வந்துள்ளார். இதனால் கோமாளிகள் தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து புது ஹீரோயினாக களமிறங்கிய பிரியங்கா மோகன் டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படத்தில் நடித்து டான் திரைப்படத்திற்கு சீப் கெஸ்ட் ஆக வந்துள்ளார். பாலா பிரியங்கா மோகனினர அழகை வர்ணித்து கூறுகிறார். பிரியங்கா மோகன் பாலாவுடன் “செல்லம்மா செல்லம்மா” பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். இதைப்பார்த்து வயித்தெரிச்சலில் மற்ற கோமாளிகள் இருந்து வருகிறார்கள்,

இதனைத் தொடர்ந்து பிரியங்கா மோகனை வர்ணிக்கும்போது பாலா தடுமாறுகிறார்.பாலவை கலாய்த்து வருகிறார் சிவகார்த்திகேயன் அதன் புரோமோ ஒன்று வெளியானது புரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு வேற லெவல் ஃபன் இருக்கு என்று எதிர்பார்க்கிறார்கள்.