உலக சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா அந்தவகையில் இவர் பாரபட்சமின்றி அனைத்து வகையான மொழிகளிலும் திரைப்படங்கள் நடிப்பதன் மூலமாக தற்போது தன்னுடைய 38 வயதிலும் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2000ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் தன்னுடைய கணவர் தன்னை விட வயது குறைவாக வேண்டுமென்ற நோக்கத்தில் தன்னை விட பத்து வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.
என்னதான் இவருக்கு திருமணம் ஆனாலும் சரி இன்று வரை இவருக்கு சினிமாவில் மட்டும் மவுசு குறைந்தது கிடையாது அந்த வகையில் இவருடைய பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் சமீபத்தில் சமந்தா தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த தன்னுடைய கணவர் குடும்ப பெயரை நீக்கியது மட்டுமல்லாமல் அதனை தொடர்ந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார் இந்நிலையில் பிரியங்கா சோப்ராவும் தன்னுடைய கணவரின் பெயரை திடீரென நீக்கியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போகிறார் என பலரும் நினைத்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன்னுடைய கணவனை கட்டி அணைத்தபடி முத்தம் கொடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அவசரப்பட்டு முடிவு செய்து விட்டோமே என மூஞ்சை எங்க கொண்டு வைத்து கொள்வது என தெரியாமல் இருக்கிறார்கள்.