ஆஸ்கர் விருது பெற்ற ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தினை பற்றி பேசும்பொழுது பிரபல நடிகை கூறி இருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜமௌலி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய இயக்கத்தில் வெளிவரும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை கண்டு வருகிறது.
அந்த வகையில் ராஜமௌலி இயக்கிய படங்களில் மிகப்பெரிய வெற்றினை கண்ட திரைப்படம் தான் பாகுபலி இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இதனை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது 5 வருடங்கள் கழித்து திரைக்கு வந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
மேலும் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் அதன் பிறகு ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ராகுல் பட், அலிசான் டூடி போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் டிவிவி நிறுவனம் தயாரித்து இருந்தது.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிரம்மாண்டமாக பல மொழிகளிலும் வெளியாகிய நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றினை கண்டது. வசூல் ரீதியாகவும் கோடிக்கணக்கில் வசூல் செய்திருந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது.
இந்நிலையில் இந்த படத்திற்கு 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படம் குறித்து பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி தற்பொழுது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பாலிவுட் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அமெரிக்கா டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் அப்பொழுது அவரிடம் ஆர்ஆர்ஆர் என்ற பாலிவுட் திரைப்படம் என்று கூறும்பொழுது உடனே அவர் இல்லை அது ஒரு தமிழ் திரைப்படம் என்று கூறி இருந்தார் அப்படி அவர் பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாக நெட்டிசன்கள் ஆர்ஆர்ஆர் ஒரு தெலுங்கு படம் என்று கூட தெரியாமல் இவ்வாறு பிரியங்கா சோப்ரா இருப்பது மிகவும் தவறு என கிண்டல் செய்து வருகின்றனர்.