நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் ஆக்சன் மற்றும் சமூக அக்கரை உள்ள திரைப்படங்களை கொடுத்து வருவதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றியை பெறுகின்றன.
ஏன் கடைசியாக கூட நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களையும் தாண்டி மக்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இப்பொழுதுகூட பாண்டிராஜ் உடன் கை கோர்த்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை மிகப் பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாகிறது. சமீபத்தில் கூட படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் டிரைலரை வெளியிட்டது மேலும் படம் குறித்து பேசி அசத்தி உள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு தடவை நடிகை பிரியங்கா மோகன் சூர்யாவிடம் உங்களுடைய காக்க காக்க திரைப் படத்தைப் பார்த்ததிலிருந்து உங்களுடைய தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் என அப்பொழுது அவர் கூறியுள்ளார். உடனே நடிகர் சூர்யா பிரியங்காவை ஒரு ஓரத்திற்கு அழைத்து சென்று நீங்கள் காக்க காக்க படம் பார்க்கும் போது உங்களுக்கு என்ன வயது என கேட்டுள்ளார்.
அதற்கு நான் மூன்றாவது படித்து கொண்டு இருந்தேன் என கூறினார் இதைக் கேட்ட சூர்யா அதிர்ச்சியாகியுள்ளார். ஆனால் இப்போ ப்ரியங்கள் அருள்மோகன் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.