தமிழ் சினிமா உலகில் பிற மொழி நடிகைகள் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய அசத்துகின்றனர். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகை மாளவிகா மோகனனை தொடர்ந்து பிரியங்கா அருள் மோகனும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பு கைப்பற்றிய அசத்தி வருகிறார் அதன் விளைவாக அவரது மார்க்கெட்டும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
பிரியங்கா அருள் மோகன் முதலில் சிவக்கார்த்திகேயனின் “டாக்டர்” திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். நடித்த முதல் படமே 100 கோடி வசூல் செய்தது மேலும் அதில் பிரியங்கா அருள் மோகன் நடிப்பு பிரமாதமாக இருந்தது இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்தது அதுவும் முன்னணி நடிகர்களுடன்..
டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து பிரியங்கா அருள்மோகன் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயன் இரண்டாவது முறையாக கைகோர்த்து டான், இப்போ சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169 திரைப்படமான ஜெயிலர் படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது மேலும் பல்வேறு புதிய படங்களிலும் ஒப்பந்தமாக இருக்கிறாராம்.
இதனால் பிரியங்கா அருள் மோகன் தனது சம்பளத்தை சற்று உயர்த்தி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் என்னதான் வெற்றி ருசித்தாலும் தனக்கும் ரசிகர்கள் தேவை என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவர் மற்ற நடிகைகள் போல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பிரியங்கா அருள் மோகன் சினிமா உலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக எப்படி இருந்துள்ளார் என்பதை எடுத்துக்காட்டு வகையில் சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன இதோ நீங்களே பாருங்கள் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக ரொம்ப ஒல்லியாகவும் இருக்கும் நடிகை பிரியங்கா அருள் மோகன்.. இதோ அந்த புகைப்படம்..