தமிழ் சினிமாவுலகில் அண்மைக்காலமாக பிற மொழி நடிகைகள் தான் ஆட்சி செய்கின்றனர் அந்த வகையில் மலையாள நடிகைகள் இடம் பெறுகின்றனர். அண்மையில் மாளவிகா மோகனன் அவரைத் தொடர்ந்து பிரியங்கா அருள்மோகன் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகளுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் முதலில் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். அதன்பின் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்திலும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்திலும் நடித்து வெற்றி பெற்றார்.
தொடர்ந்து வெற்றி பெரும் நடிகைகளில் ஒருவராக பிரியங்கா அருள்மோகன் இருந்து வருகிறார் இதனால் தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இப்பொழுது நடிகை பிரியங்கா அருள் மோகன் தலைவர் 169 வது திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் பிரியங்கா அருள் மோகனின் சினிமா பயணம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. சினிமாவுலகில் 2, 3 வெற்றி படங்களை கொடுத்து விட்டாலே போதும் புதுமுக நடிகைகள் பலரும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்திக் கொள்வது வழக்கம். ஆனால் நடிகை பிரியங்கா அருள்மோகன் தமிழ் சினிமாவில் இதுவரை மூன்று படங்களில் நடித்தாலும்..
தனது சம்பளத்தை உயர்த்தாமல் நடித்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. பிரியங்கா அருள் மோகன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் பிரியங்கா மோகன் நடித்ததற்காக சுமார் 50 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார். இச்செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.