குண்டச்சி கருவாச்சி என கேலி செய்த ரசிகர்களுக்கு சரியான சவுக்கடி கொடுக்கும் வகையில் பதிலடி கொடுத்த நடிகை பிரியாமணி..!

priyamani
priyamani

actress priyamani latest speech viral: சினிமாவில் நடிக்கும் நடிகைகள் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய உடல் எடையிலும் சரி அழகிலும் சரி மிக அதிக கவனம் எடுத்துக் கொள்வது வழக்கம் ஆனால் அதுவே திருமணம் முடிந்தாலே போதும் அவர்கள் தங்களுடைய உடல் அமைப்பையும் அழகையும் கொஞ்சம் கூட கவனிப்பதே கிடையாது. இதனால் படும் சிலிம் ஆக இருந்த நடிகைகள் கூட திருமணத்திற்குப் பிறகு பூசணிக்கா போல் மாறி விடுகிறார்கள்.

அந்த வகையில் நமது பிரியாமணியும் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடிய போய் ஆண்டி போன்ற தோற்றத்தில் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டார்.  நடிகை பிரியாமணி தெலுங்கில் முதல் முதலாக எவரே அதகாடு என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகில் கால்தடம் பதித்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு மொழி மட்டுமல்லாமல் தமிழ் இந்தி மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக மனம் வந்தது மட்டுமல்லாமல் பல மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு தன்னுடைய திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வரும் நமது நடிகைக்கு கொஞ்சம் உடல் எடை கூடி இருந்தாலும் அதனை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற அயராது போராடி உடல் எடையை முற்றிலும் குறைத்து விட்டார்.

priyamani
priyamani

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்த ஃபேமிலி மேன் என்ற பெயரில் கூட பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பிரியாமணி மிகச்சிறப்பாக அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை பிரியாமணி சினிமாவிற்கு வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டார் என அவரே கூறியிருந்தார். தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவன் உறுதுணையாக இருந்ததன் காரணமாகத்தான் என்னால் சினிமாவில் நீடித்து நடிக்க முடிந்தது.  அதுமட்டுமில்லாமல் எனக்கு திருமணம் நடைபெற்ற பிறகுதான் வாய்ப்புகளும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

priyamani
priyamani

மேலும் சினிமாவில் யார் வேண்டுமென்றாலும் சாதிக்கலாம் அது திருமணம் ஆனவர் ஆகாதவர் என்பது கிடையாது. மேலும் எனக்கு வயது ஆகிவிட்டது குண்டாக இருக்கிறேன் கருப்பாக இருக்கிறேன் என  ரசிகர்கள் கூறுவது மிகவும் தவறான செயல் ஏனென்றால் கருப்பும் ஒரு அழகு தான் என பிரியாமணி கூறியுள்ளார்.