டிக் டாக் வீடியோவை வெளியிட்ட காந்த கண்ணழகி பிரியா வாரியர்.! வைரலாகும் வீடியோ.

Actress-priya-varrier-new-tik-tok-video:சினிமாவில் ஒரு நடிகையை பிரபலம் அடைய வேண்டுமானால் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே திரை உலகில் நிற்கமுடியும் அதுமட்டுமல்லாமல் ரசிகர்களை கவர முடியும் என்பது நாம் அறிந்ததே.

அதனை மாற்றி அமைத்தவர் தான் பிரியாவாரியர் இவர் மலையாள சினிமாவில் வெளியான ஒரு ஆதார் லவ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் அதிலும் குறிப்பாக இவர் ஒரு பாடலில் கண்ணடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் எந்த ஒரு படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது அதனை வெளிப்படுத்தும் விதமாக இவரைக் இன்ஸ்டாகிராமில் சுமார் ஏழு லட்சம் பேர் பின்தொடர்ந்தனர் இருப்பினும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஆக்கவுண்ட் கணக்கை நீக்கிவிட்டார்.

இதையடுத்து தற்போது டிக் டாக் பக்கம் தனது திசையை திருப்பி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்த படத்தின் டயலாக் ஒன்றை டிக்டாக்கில் செய்துள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.