படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சியின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் ஒரு அதார் காதல் திரைப்படத்தின் மூலம் கண்சிமிட்டும் காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. பிரியா வாரியார் மலையாளம், ஹிந்தி,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் இப்படத்தில் நடிக்க கூடாது என்று பல எதிர்ப்புகள் இருந்து வந்தது ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத படக்குழுவினர்கள் இப்படத்தின் படப்பிடிப்புகளை முழுவதுமாக முடித்து ட்ரெய்லரை ரிலிஸ் செய்தார்கள்.
இந்நிலையில் தற்போது இவர் தெலுங்கு திரைப்படமான செக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங் மற்றும் முரளி சர்மா உட்பட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் அப்டேட்கள் பலவற்றை படக்குழுவினர்கள் தொடர்ந்து இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது பிரியா பிரகாஷ் வாரியர் நடிகர் நிதியுடன் காதல் செய்யும் காட்சியை படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது பிரியா பிரகாஷ் வாரியர் நிதியின் தோல் மீது தாவி உட்காரும் காட்சி எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதில் எதிர்பாராதவிதமாக பிரகாஷ் வாரியர் கீழே விழுந்து விட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது .இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரியா பிரகாஷ் வாரியரை கலாய்த்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.