சினிமாவில் பிரபலம் அடைந்துள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ரஞ்சனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் பிரிய பவானி சங்கர் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் தெலுங்கில் கல்யாணம் காமனிகம் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரியா பவானி சங்கர் நடிப்பில் ருத்ரன், 10 தல, பொம்மை, டிமான்டி காலனி 2, அகிலன், இந்தியன் 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் தற்பொழுது புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றும் ஆரம்பித்துள்ளார். அந்த உணவகம் சென்னை மாம்பாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய ஆண் நண்பர் ராஜவேலுடன் கடற்கரை வீட்டில் குடி ஏறி இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர் ராஜ்வேல் வை டேக் செய்து ஒரு மீமை பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார்
அதில் ஒரு நாள் முழுவதும் ஆண் நண்பரை புறக்கணிக்க போவதாக ஒரு பெண் கூறுவது போலவும் அதற்கு ஆண் நண்பர் அருமையான நாள் என கூறுவது போலவும் மீன் அமைந்துள்ளது. அதை பகிர்ந்த பிரியா பவானி சங்கர் தனது ஆண் நண்பர் ராஜ் வேலுவை டேக் செய்து இருந்தார். அந்த மீமுக்கு பதில் அளித்த ராஜ்வேல் அப்படியெல்லாம் இல்லை நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது நம்பு பேபி என ரிப்ளே செய்து ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.