சின்னத்திரையில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் தற்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து அசத்தினார்.
பின் வெள்ளித்திரையில் இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார் அதுவும் குறிப்பாக இந்த வருடத்தில் மட்டுமே 9 படங்களுக்கு மேல் கை வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கான சினிமா பயணம் தற்போது நீண்டுகொண்டே போகிறது. சினிமாவையும் தாண்டி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது.
வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது என்று ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக இருந்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். சினிமா உலகில் தற்போது பல்வேறு படங்களை கைப்பற்றி நடித்து வந்தாலும் ஒரு படத்திற்கு 20 லட்சம் ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறார். இதனால் இவருக்கான பட வாய்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
மேலும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை அடுத்த படத்தில் புக் செய்ய ரெடியாக இருந்த வருகின்றனர் காரணம் சம்பளம் கம்மி அதேசமயம் செம அழகாக சூப்பராக நடிப்பதால் டாப் நடிகைக்கு பதிலாக பிரியா பவானி சங்கரை கமிட் செய்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர்.
ஈசிஆரில் 20 கோடி மதிப்புள்ள ஒரு புதிய பங்களாவை வாங்கி உள்ளார் என்றும் 2 கோடி மதிப்பில் உள்ள ஒரு புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையால் மட்டுமே ஈசிஆரில் பங்களா வாங்க முடியும் ஆனால் 20 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகை பிரியா பவானி சங்கர் எப்படி ஈசிஆர் ரோட்டில் வீடு வாங்கினார் என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.