சின்னத்திரை தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றினார். மீடியா உலகில் புகுந்து பின் படிப்படியாக தனது அழகு மற்றும் திறமையின் மூலம் மக்களை கவர்ந்து இழுத்தவர் பிரியா பாவனி சங்கர். ஒருகட்டத்தில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கண்களில் இவர் பட்டதால் வெள்ளித்திரையில் நுழைந்தார்.
சினிமாவில் என்ட்ரி ஆன பிறகு பிரியா பாவனி சங்கர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வகையிலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த திரைப்படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வெற்றியை பெறுவதால் இவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது.
மேலும் சைலண்டாக இருந்து கொண்டு ஒரு பக்கம் ரசிகர்களை கவரும்படி புகைப்படம் எடுத்து வீசி வருகிறார் மறுபக்கம் பட வாய்ப்பையும் அள்ளி வருகிறார். இதனால் டாப் நடிகைகளே சற்று ஆச்சிரியத்தில் இருக்கின்றனர். 2017 ஆம் ஆண்டு மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.
கடைசியாக ஓ மணப் பெண்ணே என்ற படத்தில் நடித்தார் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து 2021 – ல் பல்வேறு திரைப்படங்களை தன் வசம் வைத்து இருக்கிறார் அந்த வகையில் குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், யானை, ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம் மற்றும் பெயர் வைக்கப்படாத இரண்டு படங்களில் அவர் நடித்து வருகிறார்.
2021 ல் அதிக படங்களை கைப்பற்றிய நடிகைகளில் முதன்மையானவராக பிரியா பாவனி சங்கர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியன் 2 படமும் வெகு விரைவிலேயே தொடங்குகிறது. இப்போ இவர் டாப் நடிகர்கள் படங்களில் நடிப்பதால் அவரது மார்க்கெட் இன்னும் நல்லதொரு இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்புவின் பத்து தல படங்களில் நடிப்பதே காரணம் என கூறப்படுகிறது இந்த நிலையில் அவர் தனுஷ் மற்றும் சிம்பு குறித்து படங்களில் நடித்தபோது தனது அனுபவத்தை கூறி உள்ளார் அவர் சொல்லியுள்ளது.தனுஷ் மற்றும் சிம்பு உடன் நடித்த அனுபவம் சிறப்பான ஒன்று அவர்கள் இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தானே என்று தெரிவித்துள்ளார்.