பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் பிரியா பவானி சங்கர், இதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார், சீரியலில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர் கூட்டம் உருவானது அதனால் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் இவர் முதன்முதலில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்பு பிரியா பவானி சங்கர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் அதனைத் தொடர்ந்து எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படத்திலும் நடித்து இருந்தார், குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் கொஞ்சம் வித்தியாசமாக ஆக்ஷன் கதையிலும் களமிறங்கினார் மாபியா திரைப்படத்தின் மூலம்.
ஆனால் இந்த ஆக்ஷன் கதாபாத்திரம் இவருக்கு சரியாக செட் ஆகதாதால் மீண்டும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்துள்ளார் ஆனால் இந்த முறை கொஞ்சம் மார்டன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார், பிரியா பவானி சங்கர், மேலும் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இதனைத் தொடர்ந்து 5 மொழிகளில் உருவாகி வரும் அகம் பிரம்மாஸ்மி என்ற தெலுங்கு திரைப்படத்தில் இதுவரை நடிக்காத அளவிற்கு படும் கிளாமரான காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.
ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரியா பவானி சங்கர் தனது கிளாமர் செட்டாகாது அதற்கேற்ற உடல் வாகு எனக்கு கிடையாது என கூறியிருந்தார், ஆனால் ரசிகர்களோ நீங்கள் கிளாமரான உடை யை போட்டு காட்டுங்க உங்களுக்கு செட் ஆகுமா ஆகாதா என்று நாங்கள் கூறுகிறோம் என கூறி வருகிறார்கள். சமீபகாலமாக டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் பிரியா பவானி சங்கர் விரைவில் கிளாமராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி கிளாமரில் குதித்தால் இவர் முன்னணி நடிகையாக வலம் வருவார் என ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் கூறுகிறார்கள்.