சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகிய தற்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி வரும் ஏராளமான முன்னணி நடிகன் நடிகைகள் இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்த நிலையில் இவர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் அந்த வகையில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த யானை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வரும் திருச்சிற்றபலம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
இவ்வாறு தொடர்ந்து உச்ச நட்சத்திரமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடித்துவரும் இவர் தற்பொழுது மீண்டும் கமலஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்ட நிலையில் சமீப காலங்களாக மீண்டும் தொடங்கியுள்ளது மேலும் சினிமாவில் கிராமத்து கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து பெயர் போன நடிகையாக மாறிய உள்ளார் பிரியா பவானி சங்கர்.
தற்பொழுது ஜெர்மனியில் சுற்றி வருகிறார் பிரியா பவானி சங்கர் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் பெங்களூரு தக்காளி போல் இருக்கிற என கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் அந்த புகைப்படத்தில் கூலிங் கிளாஸ் மாடன் உடைய மிகவும் அழகாக இருக்கிறார் சேலை மட்டுமல்லாமல் மாடன் உடையில் நச்சென்று இருக்க என கூறி வருகிறார்கள்.