தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி மென்மேலும் உயர்ந்து அதன் மூலம் சினிமாவில் கால் தடம் பதித்தனர். அப்படி சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தனது பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இவர் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர்.
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு பிரபலமடைந்தார். இப்படி சின்னத்திரையில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்த பிரியா பவானி சங்கர் ஒருகட்டத்தில் தமிழில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற பல படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கடைசியாக பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஓ மன பெண்ணே திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் குருதி ஆட்டம், பொம்மை, ருத்ரா, யானை போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் திரையரங்கில் வெளிவர தயாராக உள்ள நிலையில் மேலும் பத்து தலை, திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக சினிமாவில் என்ட்ரி ஆகி இருந்தாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக..
தனது அழகை தாராளமாக காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களைக் கவரும் வகையில் மாடர்ன் டிரஸ் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றனர்.