தமிழ் சினிமாவில் சின்னத்திரை நாயகியாக அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் கவனிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக பயணித்து வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கி பின்பு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக வலம் வந்து மேலும் ஒரு சில விருது விழா போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர்.
இப்படி அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளங்கி வந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் மாபியா, களத்தில் சந்திப்போம், ஓ மன பெண்ணே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு மட்டுமே பல்வேறு திரைப்படங்களை தன் வசப்படுத்தி உள்ளார். அந்த வகையில் பொம்மை, ஹாஸ்டல், யானை, ருத்ரன்,பத்துல தல போன்ற பல படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதிலும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. மேலும் சமீபத்தில் வெளிவந்த ஓமன பெண்ணே திரைப்படத்தின் படக்குழுவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் ஒரு புதிய பிரம்மாண்ட கூட்டணியில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தை பிரபல இயக்குனர் விக்ரம் குமார் இப்படத்தை இயக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.