தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளான நடிகை ப்ரியா பவானி சங்கர்..! மனசுல நயன்தாரான்னு நினைப்பு.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் அழைத்து வரப்பட்டவர் பிரியா பவானி சங்கர் முதலில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பின் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன இந்த வருடத்தில் கூட சுமார் ஏழு எட்டு படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யானை திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களிலும், கமீட்டான படங்களிலும் நடித்து வருகிறார் அதில் ஒன்றாக மித்திரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பிரமோஷன் விழா அண்மையில் கோலாகலமாக நடத்தப்பட்டது. அதில் நடிகர் தனுஷ் நடிகைகள் ராசி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பல பிரபலங்களும் இந்த படத்தில் நடித்தவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகை நித்யா மேனனை பாராட்டுகின்றனர் காரணம் அவருக்கு காலில் அடிபட்டிருந்த பொழுது கூட வீல் சேரில் வந்து இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் கலந்து கொள்ளாதது ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாம். குறிப்பாக தயாரிப்பாளர்கள் அவர் செம்ம கடுப்பில் உள்ளார்கள் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அப்படி செய்தது பலருக்கும் தற்போது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் என்ன அஜித், நயன்தாரான்னு மனசுல நினைப்பா அவங்க தான் படத்தின் ப்ரொமோஷனுக்கு வர மாட்டார்கள் என்றால் உங்களுக்கு என்ன.. நீங்கள் சினிமாவில் இப்பதான் வளர தொடங்கி உள்ளீர்கள் எனக் கூறிய கமெண்ட்டுகள் முலம் கிழிக்கின்றனர் மேலும் கோலிவுட் வட்டாரமே இவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் ஒரு பக்கம் தகவல் வெளியாகி உள்ளது.