நடிகை பிரியா பவானி சங்கரை திருமணம் செய்ய விடாமல் துரத்தும் வெள்ளித்திரை.? வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம்.!

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

தமிழ் சினிமா உலகில் அழகும் சற்று திறமையும் இருந்தால் படைப்புகளை அள்ள முடியும் அந்த வகையில் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை போன்ற ஓரிரு சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி சங்கர் அதன்பின் வெள்ளித்திரையில் ரத்தினகுமார் இயக்கத்தில் உருவான மேயாத மான் படத்தில ஹீரோயின்னாக நடித்தார்.

அதன் பின் சினிமா உலகில்  பட வாய்ப்புகள் ஏராளமாக குவிய தொடங்கியது அந்த வகையில் மாபியா, கடைக்குட்டி சிங்கம் போன்ற  படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த பிரியா பவானி சங்கர் தனது சம்பளத்தை மட்டும் ஏற்றி கொள்ளாமல் தொடர்ந்து பயணித்ததால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இவரை போட்டிபோட்டுக்கொண்டு படங்களில் புக் செய்து வருகின்றனர்.

இந்த வருடத்தில் மட்டுமே குறைந்தது 10 படங்கள் கையில் வைத்திருக்கிறார். இந்தியன் 2, யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், ருத்ரன், பத்து தல,  குருதி ஆட்டம் என பல படங்களில் கமிட்டாகி ஓடிக் கொண்டிருக்கிறார். சினிமாவையும் தாண்டி ரசிகர்களையும் கவர்ந்து இழுக்க டீசர்ட் மற்றும் சுடிதாரில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களை கவர்ந்துள்ளார்பிரிய பவனி சங்கர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரியா பவானி சங்கர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து கேட்கப்பட்டது அதற்கு விளக்கமளித்த அவர். முதலில் படிப்பை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தேன் ஆனால் அப்பொழுது சின்ன திரையில் வாய்ப்புகள் கிடைத்தது.

அதில் சிறப்பாக ஓடிய நான் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தேன் இப்பொழுது வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது மேயாத மான் போன்ற ஓரிரு திரைப்படங்கள் வெற்றி பெற அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது. தற்பொழுது தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன் அதனால் எனது திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. வெகு விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என அவர் பேசியுள்ளார்.