சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் இவர் கடந்த 2022ஆம் ஆண்டு அசோக் செல்வன் உடன் ஹாஸ்டல், அருண் விஜயின் யானை, அதர்வாடின் குருதியாட்டம் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதனை அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருள்நிதி டிமான்டி காலனி 2, ராகவா லாரன்ஸின் ருத்ரன் மற்றும் தெலுங்கில் நடிகர் சத்தியதேவ் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திலும் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்த வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் அகிலன், சிலம்பரசன் கௌதம் மேனனின் பத்து தல, எஸ்.ஜே சூர்யாவின் பொம்மை போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சாங்கர் தற்பொழுது தெலுங்கிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளார்.
ஆம், அதாவது தெலுங்கில் கல்யாணம் கமணீயம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை அணில் குமார் அல்லா இயக்க சந்தோஷ் சோபன் மற்றும் பிரியா பவானிசாகர் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை அடுத்து UV கான்செப்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் கட்டம்மேனி ஒளிப்பதிவில், ஜி.சத்யா படத்தொகுப்பு செய்ய, ஸ்ரவன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
இவ்வாறு ப்ரியா பவானி சாங்கர் நடித்துள்ள கல்யாணம் கமணீயம் திரைப்படம் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி அன்று உலகம் எங்கும் திரையரங்கில் ரிலீஸ்சாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.