அதாவது சமீப காலங்களாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிரபலமடைந்து வரும் நடிகர், நடிகைகள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். அந்த வகைகள் தனியார் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்து பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
தனது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மாபியா,கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
மேலும் நான் கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து பிரபலமடைந்தார். தற்பொழுது வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களை கைவசம் கைவசம் வைத்திருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் கடைசியாக அருண் விஜய்வுடன் இணைந்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் ருத்ரன்,திருச்சிற்றம்பலம்,குருதி ஆட்டம் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் அகிலன் மற்றும் பத்து தலை ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ்சாக இருக்கிறது.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரபலம் ஒருவர் இரவு எங்காவது போறியா? என தப்பாக கேட்டாராம் இது குறித்து இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்த ரேகா நாயர் சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது ரேகா தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கரை பார்த்து சின்னத்திரையில் நடித்து வரும் பொழுது ஒருவர் நைட் எங்கேயாவது போறியா என கேட்டார்.
இதெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை ஆனால் ப்ரியா பவானி சங்கரின் இடத்தில் நான் இருந்தால் அவனை செருப்பால் அடித்திருப்பேன் எனக் கூறியுள்ளார். சமீபத்தில் ரேகா நாயரை பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியதால் பயில்வான் ரங்கநாதனை நேரில் சந்தித்து ரேகா நாயர் சண்டை போட்டு பெரும் சர்ச்சை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.