சினிமா திரையுலகில் ஹீரோயினாக வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கர் தனது வாழ்க்கையை செய்தி தொகுப்பாளராக ஆரம்பித்து வந்தார். அதன்பின்பு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாதமான், என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் தனது நடிப்பின் மூலம் பிரியா பவானி சங்கர் அவர்களுக்கு பல திரைப்படத்திலிருந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
தற்போது பிரியா பாவனி சங்கர் பல திரைப்படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வளர்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் கல்லூரி காலங்களில் படித்து வந்த ராஜவேல் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார் இதை பல மீடியாக்களில் பேசியதால் இது உண்மையாக தான் இருக்க வேண்டும். என்று மீடியாக்கள் உறுதி செய்துள்ளனர்.
மேலும், நாங்கள் யாருக்காகவும் எங்கள் காதலை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் நாங்கள் எப்போதும் ஒன்றாக தான் இருப்போம் என்றும் பலமுறை கூறியிருக்கிறார். பிரியா பவானி சங்கர் இந்நிலையில் இவர்களுடைய காதல் திடீரென்று பிரேக்கப் ஆகிவிட்டதாக வலைத்தளங்களில் ஒரு செய்தியாக வெளியானது.
பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண் உடன் சேர்ந்து நடித்த ஓ மண பெண்ணே என்ற திரைப்படத்தின் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்து வந்ததால் இருவரும் காதல் செய்கிறார்கள் என்று, அதனாலதான் முன்னாள் காதலன் ராஜவேல் விட்டு பிரிந்து போனதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிவந்தது. இதைப்பற்றிய எந்த பதிவையும் பிரியா பவானி சங்கர் வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் படி தன் காதலுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவர்கள் 2 பேரும் இன்று வரையும் காதல் செய்திருக்கிறார்கள். என்று ரசிகர்களுக்கு தெரியவந்தது காட்டுத் தீயாகப் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ப்ரியா பவானி சங்கர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.