எவ்வளவு அசிங்கப்படுத்தினாளும் அடங்காமல் பிரியா பவானி சங்கரிடம் அத்துமீறும் ரசிகர்கள்.!

priya bhavani shangar 3
priya bhavani shangar 3

சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் கடந்த 2011ம் ஆண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு 2014ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற காதல் தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் முதல் சீரியலே இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது எனவே 2017ஆம் ஆண்டு மேயாதமான் திரைப் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.இதிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததால் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட இன்னும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளாக வளர்ந்து வரும் அனைத்து நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பிரியா பவானி சங்கரும் புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பதிவிட்டு இருக்கும் வீடியோ ஒன்றில் வைட் கலர் டாப் அணிந்தபடி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கெத்தாக  நடந்து வருகிறார் அதுவும் பாடி காட்களுடன் பலத்த பாதுகாப்புடன் வருகிறார். இதனைப் பார்த்த ஒரு சில ரசிகர்கள் கருப்பு பூனை எல்லாம் பெரிய பெரிய நடிகர் நடிகைகளுக்கு மட்டும் தான் தேவை எதுக்கு உங்களுக்கு எல்லாம் இது என்று கேட்டுள்ளார்கள்.நயன்தாரா ரேஞ்சுக்கு பில்டப் பண்றீங்க என பிரியா பவனி சங்கரை மீடியாவில் கலாய்த்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய போது ஒரு ரசிகர் உங்களின் Bra சைஸ் என்ன என்று கேட்டுள்ளார். எனவே கோபமடைந்த பிரியா பவானி சங்கர் செருப்பால அடிக்காத குறையாக பதிலளித்துள்ளார். சோசியல் மீடியாவில் இவரை கிண்டல் செய்தவர்களுக்கும் தக்க பதிலடி கொடுத்தது ட்ரெண்டிங்காக  இருந்து வருகிறார்.