தற்பொழுதெல்லாம் பெரும்பாலும் நடிகர்களை விடவும் நடிகைகள் எளிதில் பிரபலமடைந்து தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் தற்போது உள்ள அனைத்து நடிகைகளும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த வகையில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கி பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதன் மூலம் அறிமுகமாகி எளிதில் பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது அந்த வகையில் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் கடைக்குட்டி சிங்கம், பிளட் மணி உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தற்பொழுது இவர் கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் நடிப்பில் கடைசியாக ஓமணப் பெண்ணே வெளிவந்தது இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யான்னுடன் நெருக்கமாக நடித்திருந்தார் நடித்திருப்பார். இவ்வாறு இவர்களைப்பற்றி அதிகப்படியாக மீம்ஸ்கள் வெளிவந்தது.
இவ்வாறு திரைப்படங்கள் அதிக அளவில் கைவசம் வருவதால் குண்டாக இருந்த பிரியா தற்போது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் எனவே ஜிம்மிலேயே தனது முழு நேரத்தையும் செலவழித்து வருகிறார்.
இவ்வாறு சினிமாவில் வளர வளர கவர்ச்சியிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் பெருமாளும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதிலேயே தனது முழு நேரத்தையும் செலவழித்து வருவதாக கூறப்படுகிறது எனவே பிரியா பவானி சங்கர் நீண்ட நாளாக காதலித்து வரும் காதலர் அப்செட்டில் இருப்பதாக பிரியா பவானி ஷங்கரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகிறார்கள்.
பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஒரு நபரை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் தற்போது இவர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஜிம் கோச் இருவருடனும் தனது அதிக நேரத்தை செலவழித்து வருவதால் இவருடைய காதலர் மனமுடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.