பிரபல நடிகருக்கு இரவில் ரகசியமாக போன் செய்த பிரியா பவானி சங்கர்.! என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

தனது விடாமுயற்சியால் வெள்ளித்திரையில் தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளையும் ஓவர்டேக் செய்து குறைந்தது பத்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள அவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர்.  இவர் தற்பொழுது அசோக் செல்வன், சதீஷ் ஆகியோருடன் இணைந்து ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தினை இயக்குனர் சுமந்த் ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார் அதோடு இத்திரைப்படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்று கூறிவுள்ளார்கள். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த “அடிக் காபியாரே  கூட்டமணி” என்னும் திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இவ்வாறு இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் திரைப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர் இயக்குனர் இந்த கதையை என்னிடம் கூறய உடனே நான் இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டேன்.  மேலும் யார் இந்த கதையின் கதாநாயகன் என்று கேட்டதற்கு யாரையும் இன்னும் முடிவு செய்யவில்லை ஆனால் அசோக்செல்வன் தான் இந்த கேரக்டருக்கு நன்றாக இருக்கும் என்று சுமந்து கூறியதாகவும் தயாரிப்பாளர் ரவீந்திரன் சாரும் இதையே விரும்பினார் என்றும் கூறியுள்ளாராம்.

பிறகு நடிகர் அசோக்செல்வன் எனது நெருங்கிய நண்பர் என்பதால் ரகசியமாக போன் செய்து இதனைப் பற்றி கூறினேன். கதையைக் கேட்டபிறகு அசோக்செல்வனுக்கும் இது பிடித்துவிட்டது ஆனால் அவர் மிகவும் பிசியாக நடித்து வந்ததால் கால்சீட் பிரச்சனை இருந்தது ஆனாலும் நட்பிற்காக இவை அனைத்தையும் சரி செய்து அசோக் செல்வன் இத்திரைப் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிறகு நடிகர் அசோக் செல்வன் பிரியா பவானி சங்கர்,சதீஷ்,முனிஸ்காந்த் ஆகியோரை பாராட்டிப் பேசியுள்ளார்.  இவர் முன்பு நடித்திருந்த ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது எனவே இந்த படத்தையும் அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்குமாறு வேண்டுகோள் வைத்தார். பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடைசியாக பிளாக் மனி என்ற திரைப்படம் வெளிவந்தது. அதன் பிறகு பத்து தல, திருச்சிற்றம்பலம், யானை என இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.