அதிக வயசுடைய ஹீரோக்களை குறிவைக்கும் ப்ரியா பவானி ஷங்கர்.!

சமீப காலங்களாக வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பவானி சங்கர். இவர் மற்ற நடிகைகளை விடவும் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்றும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் என்றும் சமூக வலைதளப் பக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பிரியா பவானி சங்கர் வயதான நடிகருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் காசுக்கு தான் இந்த கெமிஸ்ட்ரி எல்லாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றார்கள் அதனைப் பற்றி தற்போது பார்ப்போம்.  பொதுவாக லவ், ஆக்சன் போன்ற திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதேபோல் பேய் படங்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்களும் மாதத்திற்கு ஒரு முறை பேய் திரைப்படம் வெளியானாலும் கூட திரையரங்கிற்கு சென்று பார்ப்போம் என்று கூறி வருகிறார்கள்.  இவ்வாறு ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு பேய் படம் ஹிட்டாக இருந்து வருவதற்கு முக்கிய காரணம் நடிகர் ராகவா லாரன்ஸ் என்றுதான் கூறவேண்டும்.

முனி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து காஞ்சனா என பல பேய் படங்களில் நடித்து ரூட்டை மாற்றினார்.  தமிழ் சினிமாவில் பேய் திரைப்படங்களுக்கு என்று தனி ஒரு இடத்தைப் பிடித்து கொடுத்தவர் இவர்தான். இவ்வாறு பேய் படம் என்றாலே ராகவா லாரன்ஸ் என்று சொல்லும் அளவிற்கு இருந்து வருகிறது.

இப்படி போய்க் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பேய் படங்களில் அதிக அளவில் நடித்து வந்ததால் கடைசி இரண்டு படங்கள் படு மோசமாக இருந்தது.  பிறகு அடுத்த படம் நடித்தால் நல்லதாக இருக்கவேண்டும் என்பதற்காக காத்திருந்தார் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் இயக்குனர் கதிரேசன் உருவாக்கி வரும் ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் இணையதளத்தில் வெளியானது.

அதோடு இத்திரைப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம். இவர்களைத் தொடர்ந்து சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்கியராஜ் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து பல முயற்சிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக கதிர் மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் முழு அர்ப்பணிப்பு செலுத்தி உள்ளதாகவும் கண்டிப்பாக 100% திரைப்படம் வெற்றி அடையும் என்றும் கூறப்படுகிறது.