தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார். மேலும் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
அந்த வகையில் தற்பொழுது இவர் ஜெயம் ரவி உடன் அகிலன் மற்றும் எஸ்.கே சூர்யா உடன் இணைந்து பொம்மை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் தன்னுடைய வசீகரமான தோற்றத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து கார்த்தி கூட நினைந்து கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய் உடன் மாஃபியா, யானை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து அகிலன் மற்றும் எஸ்.கே சூர்யா உடன் இணைந்து பொம்மை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது சிம்புவுடன் பத்து தல, கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார்.
மேலும் பிரியா நடிக்கும் தூதா என்ற வெப் சீரியல் படமாக்கப்பட்டு வருகிறது இது அமேசான் பிரைமில் வெளியிட இருக்கிறது இவ்வாறு தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்கள் நடித்த மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் மஞ்சள் நிற உடையில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.