செய்தி வாசிப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் நடித்து இதன் மூலம் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களின் வாய்ப்புகளை பெற்று தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த சீரியலை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளை விட இவர்தான் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் விரைவில் ஹாஸ்டல் திரைப்படம் வெளிவர உள்ளது.இதனை தொடர்ந்து எஸ்.கே.சூர்யாவுடன் இணைந்து பொம்மை படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் திரில்லர் படமாக அமைந்திருப்பதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என்று மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் மிதமான அளவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.