Priya bhavani shankar video: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.
கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற, மாபியா பொம்மை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்திலும் தற்போது கமிட்டாகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் திரையில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த தொடரான கல்யாணம் முதல் காதல் வரை மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து படிப்படியாக தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறி உள்ளார் அம்மணி.வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர்.
இவர் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் பிரியா பவானி சங்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் வீடியோ கேம் விளையாட்டில் கோல் அடித்தவுடன் மகிழ்ச்சியில் கப்பு முக்கியம் பிகிலு என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.
#Priyabhavanishankar #actressgallery pic.twitter.com/4AQgFyGR6O
— Tamil360Newz (@tamil360newz) April 13, 2020