சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான பல நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்களுக்கு ஏற்கனவே அவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
எனவே வெள்ளி திரையில் பிரபலம் அடைவது எளிதான ஒன்றாக அமைகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இது இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இரண்டாம் கட்ட நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் பலர் திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் விஷால் நடிப்பில் அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ள திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் தான் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இதனை உண்மையான தகவல் என்று ரசிகர்கள் அனைவரும் நம்பி வந்தார்கள்.
அந்தவகையில் ப்ரியா பவானி சங்கருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். ஆனால் நான் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை இது முற்றிலும் வதந்தி என்று கூறி பிரியா பவானி சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எனவே ரசிகர்களும் விஷாலின் மீது நடிகைகளைப் பற்றிய பல சர்ச்சைகள் இருப்பதால் இவருடன் இணைந்து நடிக்க யோசிக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.