தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படத்தில் நடித்து வந்தாலும் இதுவரை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை மட்டும் பெறவே முடியவில்லை அந்த வகையில் ஆரம்பத்தில் விருவிருவென பிரபலமானாலும் அதன் பின் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
இதன் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் புதுமுக நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரை படத்தில் நடித்து வருகிறார். என்னதான் இதுவரை முன்னணி நடிகர்களின் திரை படத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடிக்காவிட்டாலும் இன்றுவரை அவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
அந்த வகையில் இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லைக்குகளும் கமெண்டுகளும் ஏகத்திற்கு குறைந்துகொண்டே இருக்கிறது. பொதுவாக சினிமாவில் மவுசு குறைந்து விட்டால் நடிகைகள் திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான் ஆனால் நமது பிரியா ஆனந்த் அந்த எண்ணமே இல்லாமல் சின்ன படமாக இருந்தாலும் சரி நான் நடிப்பேன் என பிடிவாதத்துடன் இருக்கிறாராம்.
இது ஒரு பக்கமிருக்க நடிகை பிரியா ஆனந்த் நடிகர் அதர்வாவுடன் மூன்று வருடங்களாக லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்ததாக பிரபல பயில்வான் ரங்கநாதன் அவர்கள் சமீபத்தில் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் கூறியது என்னவென்றால் இரும்புகுதிரை என்ற திரைப்படத்தில் நடித்தபோது பிரியா ஆனந்த்க்கும் அதர்வாவுக்கும் காதல் ஏற்பட்டு பிரியா ஆனந்த் அதர்வாவிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டாராம் ஆனால் அதர்வா அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாம் நண்பர்களாக இருக்கலாம் என கூறிவிட்டாராம்.