தமிழில் வாமனன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, எல்கேஜி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கை காதலிப்பதாக வதந்தி பரவியது ஆனால் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது இவர் கன்னட மொழி படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் வெப்சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து வருகிறார்.
தற்போது பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன் மூலம் படவாய்ப்புகளை தேடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் சூரியன் உதயமாகும் நேரத்தில் கவர்ச்சியாக நின்று போஸ் கொடுத்து கேப்ஷனாக ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது என்ற கருத்தை பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்தால் அவர் ஆடை அணிந்து இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழும்பியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.