முன்பெல்லாம் ஏராளமான நடிகைகள் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தால் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் ஏனென்றால் தனது மார்க்கெட் குறைந்துவிடும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தவர்கள் பலர் உள்ளார்கள் .இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக ஏராளமான நடிகைகள் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்து இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக சினேகா, ஜோதிகா, ஷாலினி இவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் காஜல் அகர்வால் இவர்கள் அனைவருமே சினிமாவில் ஜொலித்து வந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வந்ததும் சினிமாவை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சூர்யா பட நடிகை ஒருவர் திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதாவது சூர்யா நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ் என்ற மாசிலாமணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் பிரணிதா சுபாஷ். இவர் இத்திரைப்படத்திற்கு முன்பு உதயன், சகுனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்து கொடுத்தது.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற திரைவுலகிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்த வந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தனது கணவர் பிறகு கிடைத்த பெரிய கிப்ட் இத என்றும் கூறி இருந்தார்.
மூன்று மாதங்கள் முடிந்த பிறகுதான் கர்ப்பமாக இருப்பதை பற்றி வெளியில் சொல்ல வேண்டும் என்று இவரின் கணவர் குடும்பத்தினர்கள் சொல்லிவுள்ளார்கள் எனவே இதை தாமதமாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் எனவே ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி வேகமாக ஆடுவது என அதிர்ச்சியுடன் கேட்டு வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்க கிளிக் செய்யவும்.