நடிகை பூர்ணாவிற்கு பல கோடி மதிப்புள்ள பரிசுகளை வழங்கிய கணவர்.! சர்ப்ரைஸ் தாங்க முடியாமல் திக்கு முக்காடும் நடிகை..

poorna

சமீபத்தில் நடிகர் பூர்ணாவுக்கு ஆசிப் அலி என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு நடிகை பூர்ணாவிற்கு அவருடைய கணவர் கோடி கணக்கில் பல்வேறு பரிசுகளை வாரி வழங்கி இருக்கிறார். இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மலையாளத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து கந்தகோட்டை, காப்பான், சக்கரவர்த்தி உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அதிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது மிக்சின் இயக்கத்தில் உருவாகியுள்ள பீசா 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த படம் திரையரங்குகளில் வெளியானால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

poorna 2
poorna 2

இப்படிப்பட்ட நிலையில் பூர்ணாவுக்கு சமீபத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு பிறகு தங்களுடைய குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள் மற்றும் நெருமிங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் திருமணம் முடிந்த கையோடு நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவர் அசிப் அலி கோடிக்கணக்கில் பல்வேறு பரிசுகளை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் பூர்ணாவுக்காக தான் பார்த்து பார்த்து கட்டிய ரூபாய் 25 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதோடு ரூபாய் 1.3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு காரு என கிட்டத்தட்ட 30 கோடி மதிப்புள்ள பரிசுகளை நடிகை பூர்ணாவுக்கு அவருடைய கணவர் சப்ரைஸ் கொடுத்துள்ளார்.