பொது நிகழ்ச்சியில் ஓவர் சீன் போட்ட பூர்ணா..! கடுப்பாகி கண்டமேனிக்கு திட்டி தீர்த்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை பூர்ணா பிரபலமான நடிகை திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அந்த வகையில் நமது நடிகை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளர் தன்னை தொட்டு பேசியதன் காரணமாக டென்ஷன் ஆகி அரங்கத்தை விட்டு வெளியேறி விட்டார் இவ்வாறு அவர் செய்த செயல் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வந்தன. அந்தவகையில் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தன.

பொதுவாக நமது நடிகை தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முகம் காட்டி வந்தாலும் இதற்கு முன்பு பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு,துரோகி ஆடுபுலி வேலூர் மாவட்டம் தகராறு ஜன்னலோரம் கொடிவீரன் மணல் கயிறு சகலகலா வல்லவன் தலைவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆர்வம் காட்டி வந்தது மட்டுமில்லாமல் இவர் சமீபத்தில் ஸ்ரீதேவி டிராமா என்ற கம்பெனி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வந்தார் அப்பொழுது போட்டியாளர் தன் மீது கை வைத்து பேசி அதன் காரணமாக நமது நடிகை கோபப்பட்டு விட்டார்.

மேலும் அவர் அந்த போட்டியாளரை உனக்கு அறிவு இல்லையா என் மேல் கை வைக்க உனக்கு எப்படி தைரியம் வந்துச்சு? என்னை எப்படி நீ தொடரலாம் என கண்டபடி பேசியதால்  பூர்ணாவின் ஓவர் ரியாக்சனை கண்டு ரசிகர்கள் கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள்.